Monday 8 August 2016

31st Inter school state level basketball tournament

Velammal Main School Mugappair East, Senior basketball team participated in the 31st Inter school state level basketball tournament Organized by V.M.J Hr. Sec. School, Madurai. between  27.07.16 to 29.07.16. Our School Under 17 Basket ball boys team won the trophy and Master. G.DHANUSH X-U received Best player of the tournament in senior category Tamil Nadu. 

43rd ANNUAL DAY CELEBRATIONS


The 43rd Annual Day celebrations of Jaigopal Garodia Vivekananda Vidyalaya Matriculation Higher Secondary School, Annanagar, Chennai – 40 was held in the school premises on 6th August 2016. Major Dr. M. Venkatramanan, Principal, Dwaraka Doss Goverdhan Dass Vaishnav College, Chennai was the Chief Guest. Shri. Ashok Kedia, Managing Trustee, JGVV welcomed the gathering and Principal Shri. G. Vijayakumar presented the Annual Report. 33 centum holders in XII std and 59 centum holders in X std were presented with a citation and certificate by the Chief Guest. 
 
He also awarded the general proficiency students of classes LKG to XI std. 5 students who secured District Second and District Third in the X Std. Board examination were presented cash awards to the tune of Rs. 30,000/- by the Managing Trustee. Major Dr. M. Venkatramanan addressed the students and advised them about their role in shaping their lives and the importance of their contribution to society at large. The staff members were honoured for their meritorious service of 25 years and 15 years in the Institution by Shri. Ashok Kedia, Managing Trustee. The programme began with an invocation dance ‘Sadaksharam’ in veneration of Lord Muruga, followed by a cultural extravaganza presented by students of various levels. Around 190 students from classes LKG to XII std participated in the events. The programme came to a close with the National Anthem by Choir students.

முகப்பேர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ கண்ணத்தம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழா

சென்னை ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிராமம் 20.எ பஸ் நிலையம் அருகே  அமைந்துள்ள வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கி வரும் முகப்பேர் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ கண்ணாத்தம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழா ஆலய நிர்வாகிகள் கூறுகையில்: இத்திருக்கோயிலில் ஆடித்திருவிழா மூன்று தினங்கள் கொண்டப்படுகிறது. 12.08.2016 வெக்ளிகிழமை காலை 7-மணியளவில் காப்பு கட்டுதல், 9-மணியளவில் தீச்சட்டி எடுத்தல், மதியம் 12-மணிக்கு அன்னதானம், இரவு 8-மணியவில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13-ம் தேதி சனிகிழமை காலை 9-மணியளவில் பால்குடம் எடுத்தல், நண்பகல் 12-மணியளவில் அன்னதானம், மாலை 6-மணியளவில், அம்மன் சிறப்பு ஆலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
 
இரவு 7-மணியளவில் இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது. மூன்றபவது நாள் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பகல் 12-மணியளவில் கூழ்வார்த்தல் மாலை 3- மணியளவில் பொங்கல் வைத்தல், இரவு 7-மணியளவில் சிறப்ப அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறாள். சமபந்தி விருந்து மற்றும் கும்பம் போடுதல், பூஜைகளும் நடைபெறு கிறது. மேலும் இவ்வாலயத்தில் பக்தர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் சகோதர, சகோதரிகள் குடும்பத்தார்களுக்கு திருமணயோகம் வேண்டி ஸ்ரீகண்ணத்தம்மனுக்கு அரளிப்பூ மாலை அணிவித்து பூஜை செய்து நல்லவரன்கள் அமைந்துள்ளது என்றும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆலயத்தில் அருள்புர்ந்து வரும் ஸ்ரீநாகத்தம்மனிடம் மனமுருகி வேண்டி வேப்பமரத்தில் தொட்டில் கட்டி வணங்கி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறினார்கள். 
 
மேலும் பக்தர்கள் தங்கள் பிள்ளைக்களுக்கு நல்லபடிப்பு, வேலை வாய்ப்பு, ஞாபசக்தி வேண்டி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதாகவும். இந்த ஆடி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் பேரருளை பெரும்படியும். மேலும் விபரங்களுக்கு 9941235999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும் படியும் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 26-ம் ஆண்டு கூழ்வார்த்தல் விழா

சென்னை ஜெ.ஜெ.நகர் கிழக்கு, முகப்போ; 4-வது பிளாக் வீரமாமுனிவர் சாலை, பச்சையப்பன் சாலை சந்திப்பில் அருள்மிகு ஸ்ரீசெந்தில்வேலவர் சுப்பிரமணியசுவாமி, ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 26-ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா 12.08.2016 வெள்ளிகிழமை காலை 7-மணியளவில் அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வரா ஹோமம் பூஜையுடன் விழா துவங்கப்படுகிறது. மாலை 6-மணியளவில் பதிவிளக்கு பூஜையும், அம்மனுக்கும், பக்தர்களுக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளும், இரவு 8 மணியளவில் அன்னதானமும், நடைபெறுகிறது. 13-ம் தேதி சனிக்கிழமை காலை 7-மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும், பகல் 12-மணியளவில் அன்னதானம், நடைபெறுகிறது. 
 
மாலை 6-மணியளவில் அம்மன் வர்ணையுடன் மகா தீபாராதனை பூஜைகளும், இரவு 8-மணியளவில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. 14-ம் தேதி காலை 7- மணியளவில் ஸ்ரீமுத்துமாரி அம்மனுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்குதல், 9-மணியளவில் சக்தி கரகம், வீதி உலா வருதல், நண்பகல் 1-மணியளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 6-மணியளவில் ஸ்ரீமுத்துமாரி அம்மன் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம், கும்பம் படைத்தல், இரவு 8-மணியளவில் அன்னதானமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள். பின்பு அம்மனுக்கும், பக்தர்களுக்கும் காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கு  பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படியும் விழா ஏற்பாடுகள் செய்துவரும் திருக்கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆடி பூரம் திருக்கல்யாண வைபோகம் விழா

சென்னை ஜெ.ஜெ.நகர் மேற்கு முகப்பேர் அருகேயுள்ள பெரிய நொளம்பூர் வெள்ளாளர் தெருவில் 600 ஆண்டுகள் பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுந்த நாதபெருமாள் ஆலயத்தில் ஆடி பூரம் திருக்கல்யாண வைபோகம் விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் சீர்வரிசையுடன் வந்து சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்டனர். நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  

ஆற்றுக்கால் ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயிலில் 10-ம் ஆண்டு ஆடித்திருவிழா

சென்னை அம்பத்தூர் ஐ.சி.ப் காலனி அருகேயுள்ள சுபாஷ் நகரில் ஆற்றுக்கால் ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் டாக்டர் கோபிநாத் சேரிடபுள் டிரஸ்ட் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 10-ம் ஆண்டு ஆடித்திருவிழா இரண்டு தினங்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழா 12.08.2016 வௌ;ளிகிழமையன்று மாலை 5.30 மணியளவில் திருவிளக்கு பூஜையும், 14-ம் தேதி ஞாயிற்று கிழமை காலை 10-மணி யளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபராதனையும், மதியம் 12-மணியளவில் கூழ்வார்த்தல் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது இவ்விழாவில் அனைத்து பக்தகோடிகளும் கலந்து கொண்டு ஸ்ரீ பகவதி அம்மனின் பேரருளை பெறும்படியும் மேலும் விவரங்களுக்கு 9445185710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் திருக்கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் அருள்மிகு நவக்கிரக நாயகி கருமாரி அம்மன் திருக்கோயிலில் தீமிதி விழாவுடன் முப்பெரும்விழா

பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7-எச் பஸ் நிலையம் அருகில் பக்தர்களால் ஆடியகோயில் என்றழைக்கப்படும். அருள்மிகு நவக்கிரக நாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 30-ம் ஆண்டு ஆடித்திருவிழா, 5-ம் ஆண்டு தீமிதி திருவிழா மற்றும் 13-ம் ஆண்டு ஸ்ரீ வரலட்சுமி நோன்பு திருவிளக்கு பூஜை என்று முப்பெரும்விழா நடைபெற உள்ளது. விழா பற்றி திருக்கோயில் நிர்வாகிகள் கூறுகையில்: 12.08.2016 வௌ;ளிக்கிழமை அதிகாலை 5மணியளவில் கணபதி ஹோமம், பதிவிளக்கு பூஜைகளுடன் விழா துவங்கப்படுகிறது. 

காலை 6 மணியளவில் சிறப்பு அபிஷேகம் அலங்;கார மகா தீபாரதனையும் 8-மணியளவில் பம்பை, உடுக்கை வர்ணனையும், அம்மனுக்கு காப்புகட்டுதல் பூஜையும், நண்பகல் 12-மணியளவில் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 5-மணியளவில் ஆலயத்தில் தனி சன்னதி அமைத்து அருள்புரிந்து வரும் அருள்மிகு ஸ்ரீஐஸ்வர்யலெட்சுமிக்கு வரலட்சுமி நோன்பு சிறப்பு ஹோமம், திருவிளக்கு பூஜை, சந்தன காப்பு அலங்காரத்தில் மகாதீபாரதனை பூஜைகள் நடைபெற உள்ளது. 13-ம் தேதி சனிக்கிழமை மாலை 6-மணியளவில் அம்மனுக்கு மகா தீபாரதனைகளும் பூஜைகளும் நடைபெறுகிறது. 

மாலை 6.30 மணியளவில் இறைவனிடம் பக்தர்கள் வேண்டுவது அருளையா அல்லது பொருளையா எதை தலைப்பில் இன்னிசையுடன் பட்டிமன்றம் நிகழ்ச்சியும், இரவு 10 மணியளவில்  அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெறுகிறது. 14ந் தேதி ஞாயிறு காலை 8-மணியளவில் இத்திருக்கோயிலில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு கலெக்டர் நகர் கருமாரி அம்மன் கோயிலை சென்றடைந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் அருள்கரம் பக்தர்கள் சீருடையில் பால்குடம் எடுத்து, சூலம் ஏந்தி, அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி திருவீதி உலா நடைபெறுகிறது. 

பகல் 12-மணியளவில் அம்மனுக்கு பாலாபிஷேகம் பூஜையை தொடா;ந்து கூழ்வார்த்தல் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6-மணியளவில் தீமிதி திருவிழா நடைபெற்று, சென்டைமேளம் முழங்க, வானவேடிக்கையுடன், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இரவு 10-மணியளவில் கும்பம் கொட்டும் விழா நடைபெறுகிறது. முப்பெரும் விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெரும்புபடி விழா ஏற்பாடுகளை செய்து வரும் திருக்கோயில் நிலீ;வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Annanagar Daily posts