Monday, 8 August 2016

ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் அருள்மிகு நவக்கிரக நாயகி கருமாரி அம்மன் திருக்கோயிலில் தீமிதி விழாவுடன் முப்பெரும்விழா

பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7-எச் பஸ் நிலையம் அருகில் பக்தர்களால் ஆடியகோயில் என்றழைக்கப்படும். அருள்மிகு நவக்கிரக நாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 30-ம் ஆண்டு ஆடித்திருவிழா, 5-ம் ஆண்டு தீமிதி திருவிழா மற்றும் 13-ம் ஆண்டு ஸ்ரீ வரலட்சுமி நோன்பு திருவிளக்கு பூஜை என்று முப்பெரும்விழா நடைபெற உள்ளது. விழா பற்றி திருக்கோயில் நிர்வாகிகள் கூறுகையில்: 12.08.2016 வௌ;ளிக்கிழமை அதிகாலை 5மணியளவில் கணபதி ஹோமம், பதிவிளக்கு பூஜைகளுடன் விழா துவங்கப்படுகிறது. 

காலை 6 மணியளவில் சிறப்பு அபிஷேகம் அலங்;கார மகா தீபாரதனையும் 8-மணியளவில் பம்பை, உடுக்கை வர்ணனையும், அம்மனுக்கு காப்புகட்டுதல் பூஜையும், நண்பகல் 12-மணியளவில் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 5-மணியளவில் ஆலயத்தில் தனி சன்னதி அமைத்து அருள்புரிந்து வரும் அருள்மிகு ஸ்ரீஐஸ்வர்யலெட்சுமிக்கு வரலட்சுமி நோன்பு சிறப்பு ஹோமம், திருவிளக்கு பூஜை, சந்தன காப்பு அலங்காரத்தில் மகாதீபாரதனை பூஜைகள் நடைபெற உள்ளது. 13-ம் தேதி சனிக்கிழமை மாலை 6-மணியளவில் அம்மனுக்கு மகா தீபாரதனைகளும் பூஜைகளும் நடைபெறுகிறது. 

மாலை 6.30 மணியளவில் இறைவனிடம் பக்தர்கள் வேண்டுவது அருளையா அல்லது பொருளையா எதை தலைப்பில் இன்னிசையுடன் பட்டிமன்றம் நிகழ்ச்சியும், இரவு 10 மணியளவில்  அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெறுகிறது. 14ந் தேதி ஞாயிறு காலை 8-மணியளவில் இத்திருக்கோயிலில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு கலெக்டர் நகர் கருமாரி அம்மன் கோயிலை சென்றடைந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் அருள்கரம் பக்தர்கள் சீருடையில் பால்குடம் எடுத்து, சூலம் ஏந்தி, அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி திருவீதி உலா நடைபெறுகிறது. 

பகல் 12-மணியளவில் அம்மனுக்கு பாலாபிஷேகம் பூஜையை தொடா;ந்து கூழ்வார்த்தல் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6-மணியளவில் தீமிதி திருவிழா நடைபெற்று, சென்டைமேளம் முழங்க, வானவேடிக்கையுடன், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இரவு 10-மணியளவில் கும்பம் கொட்டும் விழா நடைபெறுகிறது. முப்பெரும் விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெரும்புபடி விழா ஏற்பாடுகளை செய்து வரும் திருக்கோயில் நிலீ;வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts