சென்னை ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிராமம் 20.எ பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கி வரும் முகப்பேர் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ கண்ணாத்தம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழா ஆலய நிர்வாகிகள் கூறுகையில்: இத்திருக்கோயிலில் ஆடித்திருவிழா மூன்று தினங்கள் கொண்டப்படுகிறது. 12.08.2016 வெக்ளிகிழமை காலை 7-மணியளவில் காப்பு கட்டுதல், 9-மணியளவில் தீச்சட்டி எடுத்தல், மதியம் 12-மணிக்கு அன்னதானம், இரவு 8-மணியவில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13-ம் தேதி சனிகிழமை காலை 9-மணியளவில் பால்குடம் எடுத்தல், நண்பகல் 12-மணியளவில் அன்னதானம், மாலை 6-மணியளவில், அம்மன் சிறப்பு ஆலங்கரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இரவு 7-மணியளவில் இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது. மூன்றபவது நாள் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பகல் 12-மணியளவில் கூழ்வார்த்தல் மாலை 3- மணியளவில் பொங்கல் வைத்தல், இரவு 7-மணியளவில் சிறப்ப அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறாள். சமபந்தி விருந்து மற்றும் கும்பம் போடுதல், பூஜைகளும் நடைபெறு கிறது. மேலும் இவ்வாலயத்தில் பக்தர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் சகோதர, சகோதரிகள் குடும்பத்தார்களுக்கு திருமணயோகம் வேண்டி ஸ்ரீகண்ணத்தம்மனுக்கு அரளிப்பூ மாலை அணிவித்து பூஜை செய்து நல்லவரன்கள் அமைந்துள்ளது என்றும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆலயத்தில் அருள்புர்ந்து வரும் ஸ்ரீநாகத்தம்மனிடம் மனமுருகி வேண்டி வேப்பமரத்தில் தொட்டில் கட்டி வணங்கி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறினார்கள்.
மேலும் பக்தர்கள் தங்கள் பிள்ளைக்களுக்கு நல்லபடிப்பு, வேலை வாய்ப்பு, ஞாபசக்தி வேண்டி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதாகவும். இந்த ஆடி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் பேரருளை பெரும்படியும். மேலும் விபரங்களுக்கு 9941235999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும் படியும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment