முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் மாணவர்களின் கலை மற்றும் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் 27.01.2018 அன்று மிகப் பிரம்மாண்டமான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மாணவர்கள் தாமே உருவாக்கியிருந்த பல்வேறு கலை மற்றும் அறிவியில் மாதிரி உருவங்கள் கண்களைக் கவரும் வகையிலும் மாணவர்களிடம் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வகையிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன கிராமியக் கலைகள், உறியடித்தல், பல்வேறு விளையாட்டுகள், விலங்குள் காட்சியகம், புத்தகக் கண்காட்சி, தாவரக்கண்காட்சி போன்றவைகள் இடம்பெற்றிருந்தன. இக்கண்காட்சியின் ஒரு பகுதியாக மாணவர் மற்றும் பெற்றோர் நலன் கருதி இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.
No comments:
Post a Comment