Monday, 29 January 2018

மாநில அளவிலான மாதிரி நீட் தேர்வில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி முதலிடம் வென்று சாதனை

ஹிந்து கல்வி நிறுவனம் மற்றும் ஸ்மார்ட் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய மாநில அளவிலான மாதிரி நீட் தேர்வு 2018 ஜனவரி 7-ம் நாள் வெளி மாநிலங்களிலுள்ள முன்னனி தேர்வு மையங்களில் நடைபெற்றது. சுமார் 5099 மாணவர்கள் பங்குபெற்ற இத்தேர்வில் வேலம்மாள் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி காயத்ரி 99,5% மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் வென்று சாதனை புரிந்தார்.
 
மேலும் இதே பள்ளியைச் சார்ந்த 12-ம் வகுப்பு மாணவன் செல்வன் தினகர் 99.95% மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும் மாணவி கார்த்திகா லட்சுமி 99.86% மதிப்பெண்கள் பெற்று 5-ம் இடத்தையும், செல்வன் கௌரவ் 99.83% மதிப்பெண்கள் பெற்று 6&ம் இடத்தையும் பெற்றுச் சாதனை புரிந்தனர். ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் இச்சாதனை மற்ற மாணவர்களுக்கு ஓர் உந்துதலாகவும் வழிகாட்டலாகவும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts