Saturday, 20 January 2018

தேசிய கூடைப்பந்து கூட்மைப்பு மற்றும் வேலம்மாள் பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் கூடைப்பந்து பயிற்சிப் பட்டறை

முகப்பேர் வேலம்மாள் பள்ளி  தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பு மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பயிற்சிப் பட்டறை வேலம்மாள் பள்ளியில் 20.01.2018 அன்று பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாணவர்களின் உடல்திறனை மேம்படுத்தும் வகையிலும் கூடைப்பந்து விளையாட்டின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்பிக்கும் வகையிலும் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். 

இப்பயிற்சியில் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் இயக்குநர் ஸ்காட் ஃப்ளமிங் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்தார். இப்பயிற்சிப் பட்டறை கூடைப்பந்து விளையாட்டில் இடம்பெற்றுள்ள புதுவித யுத்திகளையும் மாணவர்களுக்கு கற்பிப்பதாக அமைந்தது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts