வாழைப் பூவை தற்போது பலரும் செய்வதே இல்லை. ஏன் என்றால் அதனை சுத்தம் செய்யும் முறை மிகவும் கடினம் என்பதால்.
பலருக்கும் வாழைப் பூவை சுத்தம் செய்வது எப்படி என்றேத் தெரியாது. முதலில் வாழைப் பூவில் இருக்கும் ஒரு வெள்ளை நரம்பு போன்ற மண்டலத்தைத் தனியாக எடுத்து விட வேண்டும்.
ஒவ்வொரு பூவிலும் இருந்து இந்த நரம்பு மண்டலத்தை நீக்கா விட்டால், சமைத்த பின் பயங்கரமாக கசக்க ஆரம்பித்துவிடும்.
இப்படி நரம்புகளை எடுத்துவிட்ட பின் பொடியாக நறுக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரு எளிய வழி உள்ளது. பூவை ஆய்ந்து அவற்றை மிக்சியில் போட்டு இரண்டே சுற்று சுற்றினால் போதும். ஒரே அளவாக நறுக்கப்பட்டுவிடும்.
இனி உங்கள் வீட்டில் அவ்வப்போது வாழைப் பூவை சமைத்து சாப்பிடுவீர்கள் அல்லவா?
No comments:
Post a Comment