தேவையானவை:
கேரட் - 1
கோஸ் - 1 துண்டு
உருளைக் கிழங்கு - 2
ப மிளகாய் - 2,
பூண்டு - 4 பல்லு
சோள மாவு - 4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 கப்
சோயா சாஸ் - 1தேக்கரண்டி
உப்பு - சிறிது,
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
காய்கறிகளை நறுக்கிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். வெந்த காய்கறிகளை தண்ணீர் வடித்து எடுத்து மசித்துக் கொள்ளவும். அதில் சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து பிசையவும்.
அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வாணலில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை அதில் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
வேறொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயத் தாள் போட்டு வதக்கவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு தூள், சோயா சாஸ் ஊற்றி கொதிக்க விடவும். இந்த கரைசல் சுண்டி வரும் போது வறுத்த உருண்டைகளைப் போட்டு மெதுவாக கிளறி விடவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment