Thursday 4 August 2016

ஐபோனில் உள்ள ‘ஐ’ க்கு ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய அர்த்தம்

ஆப்பிள் நிறுவனம் 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்நியாக் மற்றும், ரோனால்டு வெயின் கூட்டணியில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் ஆப்பிள் தயாரிப்பான ஐபோன், ஐபேட், ஐபாட், ஐடியூன்ஸ் போன்ற சேவைகளுக்கு நன்கு அறிமுகமாகி இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஐமேக் கருவி 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

அன்று முதல் பெரும்பாலான ஆப்பிள் கருவிகளில் ‘ஐ’ முன்வைக்கப்பட்டது. அப்படி அந்த ‘ஐ’ -ன் உண்மை அர்த்தம் தான் என்ன?.. அதன் அர்த்தம் இண்டர்நெட் என ஆப்பிள் கருவியின் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார். இந்த ‘ஐ’ என்பது வெறும் இண்டர்நெட் என்பதை தாண்டி தனிப்பட்ட (individual), அறிவுறுத்து (instruct), தெரிவித்தல் (Inform) மற்றும் ஊக்குவித்தல் (inspire) போன்றவற்றையும் அர்த்தமாகக் கொண்டுள்ளதாக ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts