Saturday 30 July 2016

ஸ்ரீ நவகிரக நாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோவிலில் குருபெயர்ச்சி திருவிழா

பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான ஆடும் கோயில் என்று பத்தர்களால் அழைக்கப்படும் ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7-எச் பஸ் நிலையம் அருகே அருள்மிகு ஸ்ரீநவகிரக நாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் குருபெயர்ச்சி திருவிழா 02.08.2016 செவ்வாய் கிழமை காலை 9.27 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழா பற்றி திருக்கோயில் நிர்வாகிகள் கூறுகையில்: நவகிரக நாயகராகவும், மிகவும் வலியவரும் தேவகுரு, ப்ரஹஸ்பதி என்று அழைக்கப்படுபவருமான ஸ்ரீ குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு உச்ச பலத்துடன் பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு இத் திருக்கோயிலில் தனி சன்னதி அமைத்து பக்தர்களுக்கு கேட்ட வரங்களை வழங்கிவரும் ஸ்ரீ குருபகவான், தியான மூர்த்தியாகவும், ஸ்ரீ ஞான மூர்த்தியாகவும், எண்ணற்ற பக்தக்கோடிகளுக்கு அருள்புரிந்து வருகின்ற ஸ்ரீ தட்ஷிணாமூர்த்தி சுவாமிக்கு 02.08.2016 செவ்வாய்கிழமை காலை 5-மணியளவில் 1008 (ஆயிரத்து எட்டு) கலசம் வைத்து யாக பூஜையும், 108 சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், மகா தீபராதனையும் நடைபெற உள்ளது. 
 
கலசாபிஷேகம் செய்த கலசங்களும், அருள்பிரசாத பையும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த குருபெயர்ச்சி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு கல்யாண தடை நீங்கிட, கல்வி ப்ராப்தம், உத்யோக ப்ராப்தம், வியாபார விருத்தி, சகல காரிய விருத்திக்கும் ஸ்ரீ குரு பகவானுக்கு நெய் தீபம், முல்லை பூகொண்டை கடலை மாலை, மஞ்சல் துணி சாற்றி பக்தர்கள் வழிபட்டால் சுபம், பரிகார ராசிகாரர்கள் மட்டுமல்லாமல் மற்ற ராசிகாரர்களும் வழிபட உத்தமம். ஹோமம், கலச பூஜை, சங்காபிஷேக பூஜை, சிறப்பு அபிஷேக பூஜைகளுக்கு உபயதகரர்கள் வரவேற்கப்படுகிறார்கள், என்றும் விழா ஏற்பாடுகள் செய்து வரும் திருக்கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts