Saturday 30 July 2016

மாரடைப்பு நோய் பற்றி...

மாரடைப்பு நோய் (Coronary Artery Disease)
இந்தியாவைப் போல் வளர்ந்து வரும் நாடுகளில், நமது அன்றாட வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களினால், மாரடைப்பு நோய் இறப்பிற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்த குழய்களில் கொழுப்பு சேர்வதினால் அக்குழாய்கள் குறுகி அடைப்பு ஏற்படுகிறது. குறுகிய இரத்த குழாய்களில் போதுமான இரத்தமும், ஆக்ஸிஜனும் இருதயத்திற்கு செல்லாததால் உடல் உழைப்பும், மன உளைச்சலும் அதிகரிக்கும் பொழுது நெஞ்சுவலி உண்டாகின்றது. சில சமயம் அவ்வடைப்பின் மீது இரத்த உறைவு ஏற்பட்டு இரத்த குழாய் முழுவதும் அடைந்து மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகின்றது. இதனால் இருதய தசைக்கு நிரந்தர சேதம் ஏற்படுகிறது.

முக்கிய காரணிகள்:
புகை பிடித்தல், சர்க்கரைநோய், உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவை.

அறிகுறிகள்:
நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், செயல்பாட்டில் சோர்வு
இருதயத்திற்கு, இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படும் போது நெஞ்சுவலி ஏற்படுகின்றது. ஆரம்ப நிலையில் உடல் உழைப்பின் போதே, மன அழுத்தத்தின் போதோ ஏற்படும் இந்த வலி ஓய் வெடுத்த பின்னர் நின்றுவிடும் (Stable Angina) அடைப்பின் தாக்கம் அதிகமாகும் போது ஓய்வின்போதும் இவ்வலி ஏற்படும் (Unstable Angina).
நெஞ்சின் நடுவிலோ, இடது பக்கமாகவோ ஏற்படும் இந்த வலி அழுத்துவது போலவோ, பாரமாகவோ உணரப்படும். சிலருக்கு கழுத்து, இடது கை மற்றும் மேல்வயிற்றுப் பகுதிகளில் இவ்வலி பரவக் கூடலாம். இவ்வலி ஏற்படும் பொழுது வியர்வை, மூச்சுத்திணறல், நெஞ்சு படபடப்பு அல்லது மயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
நீரிழிவு நோய் உள்ள சிலருக்கு வலி உணராமலும் போகலாம் (Silent Angina)

மாரடைப்பு நோயின் பின் விளைவுகள்:
இருதய பலவீனம் (Cardiac Failure)
இருதய வால்வில் கசிவு (Mitral Regurgitation)
இருதய தசைகளில் விரிசல் (Ventricular Rupture)
திடீர் மரணம்

நோய் கண்டறிதல்:
மாரடைப்பு நோயை கண்டறிய தேவையான பரிசோதனைகள்
ஈசிஜி (ECG)
டிரெட்மில் (Treadmill Test)
எக்கோ ஸகான் (ECHO)
ஆஞ்சியோகிராம் (Angidgram)
இரத்தப் பரிசோதனை (Cardiac Enzymes Level)

சிகிச்சை:
நோயின் தீவிரத்திறிகேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.
மாரடைப்பு எற்பட்டு ஆறுமணி நேரத்திற்குள் (Golden Period)  கண்டறியப்பட்டால் மருந்து கொடுத்து அடைப்பை கறைக்கலாம் உயிரை காப்பாற்றும் இந்த சிகிச்சை முறைக்கு திராம்போலைசிஸ் (Thrombolysis) என்று பெயர்.

அடைப்பின் தன்மை குறைவாக இருந்தால் மாத்திரைகளின் மூலம் அடைப்பு பெருகாமல் காத்துக்கொள்ளலாம்.

அடைப்பின் தன்மை அதிகமாக இந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) அல்லது அறுவை சிகிச்சை (Bypass Surgery)  முறைகள் உள்ளன.

மாரடைப்பு நோய் வராமல் தடுக்க வழிமுறைகள்:

மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவை தவிர்த்து சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.
நீரிழிவு மற்றும் இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் தேவையான சிகிச்சை எடுத்து நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் வருடாந்திர உடல் பரிசோதனை செய்த கொள்ள வேண்டும்.

Dr.K.முகேஷ், M.S., M.Ch (CTS), MRCS (Ed,UK)
இருதய அறுவை சிகிச்சை நிபுணர்
KK CARDIAC & ENT CLINIC
SBOA பள்ளி சாலை, கனரா வங்கி எதிரில்,
அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை & 600 101.
தொலைபேசி எண்: 7358524351

No comments:

Post a Comment

Annanagar Daily posts