சென்னை ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 6-வது பிளாக் பரணர் சாலையில் அருள்மிகு ஸ்ரீதேவிகருமாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில் 27-ம் ஆண்டு ஆடித் திருவிழாவை பற்றி நிர்வாகிகள் கூறுகையில்: 5.8.2016 வெள்ளிகழமை காலை 7-மணியளவில் கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் பூஜைகளுடன் விழா துவங்கப்படுகிறது. மதியம் 12-மணி யளவில் அன்னதானமும், மாலை 6-மணியளவில் அம்மனுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும், மகாதீபாராதனை பூஜைகளும் நடைபெறுகிறது.
மறு நாள் 6-ம் தேதி காலை 8-மணி யளவில் கங்கை திரட்டுதல், மாலை 6-மணி யளவில் அம்மனுக்கு சிறப்பு குங்கும காப்பு அலங்காரமும், மகாதீபாராதரனை பூஜைகளும் நடைபெறுகிறது. 7-ம் தேதி காலை 7 மண யளவில் அம்மனுக்கு அபிஷேகம், மகா தீபாதனையும், அம்மன் பூங்கரகம், திருவீ தி உலாவும் அதைத்தொடா;ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 6-மணியளவில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு சிறப்பு ஆராதனையும், வானவேடிக்கையுடன், மங்கள வாத்தியம் முழங்க அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்த பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இரவு கும்பம் படையல் பூஜையும் நடைபெறுகிறது. பக்தா;கள் இவ்விழாவில் கலந்து கொள்ளும்படியும் மேலும் விபரங்களுக்கு: 9941508381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் திருக்கோயில் நிலீ;வாகிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment