Saturday 30 July 2016

அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயிலில் 23-ம் ஆண்டு ஆடி தீமிதி திருவிழா

ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 11-வது பிளாக் கண்ணதாசன் சாலையில் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 23-ம் ஆண்டு ஆடிதீமிதி திருவிழா துவங்கப்பட்டது. விழாபற்றி திருக்கோயில் நிர்வாகிகள் கூறுகையில்: 29-07-2016 வெள்ளிகிழமை அதிகாலை 4.30 மணியளவில் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. பூஜையை தொடா;ந்து கொடிகட்டுதல், அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், 1-மணியளவில் அன்னதானமும், மாலை 6 மணி யளவில் சந்தனகாப்பு அலங்காரம், குடம் அலங்கரித்து காப்புகட்டுதல், கரகம் ஆலயத்தை சுற்றிவருதல் நிகழ்ச்சிகளும். மறுநாள் 30-ம் தேதி சனிகிழமை காலை 8-மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். 
மதியம் 1-மணியளவி ல் அன்னதானமும், மாலையில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், கரகம் ஆலயத்தை சுற்றிவருதல் பூஜைகளும் நடைபெற்று. 31-ம் தேதி ஞாயிறு காலை 6-மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 8-மணியளவில் கரகம் திருவீதி உலா அக்னி சட்டி ஏந்தி ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கின்றனர். நண்பகல் 1-மணியளவில் கூழ் வார்த்தலும், மாலை 6-மணியளவில் தீமிதி திருவிழாவும், அதைத் தொடர்ந்து. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் மற்றும் புதியதாக வாங்கியுள்ள உற்சவ மூர்த்திகள் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவசேனை ஆகிய சுவாமிகள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள். இரவு 10-மணியளவில் கும்பம் இடும் விழா நடைபெறுகிறது. பக்தா;கள் அனைவரும் கலந்து கொண்டு கொள்ளும்படியும் விழா ஏற்பாடுகள் செய்துவரும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts