கின்னஸ் உலக சாதனையில் ஆர்வமிக்க ஒருவர், உடல் முழுவதும், 500 இடங்களில், பல நாடுகளின் கொடிகளை பச்சை குத்தி, சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். கின்னஸ் சாதனைடில்லியைச் சேர்ந்தவர் ஹர் பிரகாஷ் ரிஷி, 74. வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்து வரும் இவர், கின்னஸ் உலக சாதனையில் ஆர்வம் உடையவர். 1990ல் இருந்து, அடுத்தடுத்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
டில்லியில், இரு நண்பர்களுடன், 1990ம் ஆண்டு, 1,001 மணி நேரம் ஸ்கூட்டரில் சவாரி செய்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். உலக சாதனைக்காக, சில வினோதமான செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். உடல் முழுவதும், 500 இடங்களில், 366 நாடுகளின் கொடிகளை பச்சை குத்தியுள்ளார். இதுபோலவே, வாயில், 50 எரியும் மெழுகுவர்த்திகளை திணித்தும் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.
20க்கும் மேற்பட்ட...இதுவரை, 20க்கும் மேற்பட்ட உலக சாதனைகளை செய்துள்ள ரிஷி, தற்போது, உடலில் மீதமுள்ள இடத்தில், மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரின் உருவங்களையும் பச்சை குத்தி வருகிறார். இதன் மூலமும் சாதனை நிகழ்த்தப் போவதாக, அவர் கூறியுள்ளார். அடுத்தடுத்த கின்னஸ் சாதனைகளால், அங்குள்ள மக்களால், 'கின்னஸ் ரிஷி' என்றே, அவர் அழைக்கப்படுகிறார்.

No comments:
Post a Comment