இந்தியாவில், ஆண்டுக்கு, 18.50 லட்சம் டன் மின்னணு கழிவுப் பொருட்கள் சேகரமாகின்றன. இதில், தொலைத் தொடர்பு சாதனங்களின் பங்கு, 12 சதவீதமாக உள்ளது. நாட்டில், 100 கோடிக்கும் அதிகமாக, மொபைல் போன்கள் புழக்கத்தில் உள்ளன; அவற்றில், ஆண்டுக்கு, 25 சதவீதம், பயன்படுத்தப்படாமல் கழிவுகளாக மாறுகின்றன.
மின்னணு கழிவு பொருட்களில், அமைப்பு சாரா துறையினரின் பங்களிப்பு, 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வெப்பமூட்டும் சாதனங்கள், கம்ப்யூட்டர் திரைகள், விளக்குகள், பெரிய மற்றும் சிறிய சாதனங்கள், சிறிய தகவல் தொழில்நுட்ப கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்கள் என, ஆறு பிரிவுகளின் கீழ், மின்னணு கழிவு பொருட்கள் வகைப்படுத்தப்படுகின்றன. உலகில் உற்பத்தியாகும் மின்னணு கழிவு பொருட்களில், இந்தியா, 5வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.

No comments:
Post a Comment