Tuesday, May 24, 2016

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை 'ஆன்லைனில்' இன்று விண்ணப்பம்

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, 'ஆன்லைனில்' இன்று, மே 24 முதல் விண்ணப்பிக்கலாம்,'' என, நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்தார். அவர் கூறியதாவது: டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., - பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இதற்கான விண்ணப்பம், www.accet.in, www.accete.edu.in, www.accetle.com என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை, ஆன்லைனில் பூர்த்தி செய்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன் சேர்க்கை கட்டணம், 300 ரூபாய்க்கான டி.டி., -மதிப்பெண் விவர பட்டியல், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய ஆதாரங்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, 'செயலர், பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை, அழகப்ப செட்டியார், பொறியியல் கல்லுாரி, காரைக்குடி' என்ற முகவரிக்கு ஜூன், 10க்குள் அனுப்ப வேண்டும். எஸ்.சி.,- - எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. டி.டி., இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts