Tuesday, May 24, 2016

பிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்

'பிளஸ் 2 மாணவர்களுக்கான உடனடி துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை நடக்கும்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்காக, சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை நடக்கும். இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், தங்கள் பள்ளி மற்றும் தேர்வு மையம் மூலம் மட்டுமே, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க முடியும். தனியார், 'பிரவுசிங்' மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. தேர்வு எழுத விரும்புவோர், இன்று முதல் மே, 27 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts