Friday, 12 December 2014

மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்க்கா திருக்கோவிலில் ஸ்ரீவைகுந்தம் சொர்க்கவாசல் திறப்பு முப்பெரும் விழா

புகழ் மிக்க திருக்கோவில்களில் ஒன்றான பூலோகம், வைகுந்தம், கைலாயம் என்று மூன்று அடுக்குகள் கொண்டு சிறப்பு அம்சங்களாக 50க்கும் மேற்பட்ட தனி சன்னதிகள் அமைத்து சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்க்கா திருக்கோவில், ஜெ.ஜெ.நகர் மேற்கு முகப்பேர் பஸ் நிலையம் அருகில் காளமேகம் சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் 1.1.2015 வியாழக்கிழமை அன்று ஸ்ரீவைகுந்தம் சொர்க்கவாசல் திறப்பு முப்பெரும்விழா நடைபெற உள்ளது.

விழா அன்று திருக்கோவிலில் அதிகாலை 4.30மணி அளவில் ஸ்ரீவைகுந்தத்தில் அமைந்துள்ள சொர்க்கவாசல் திறப்புவிழாவும், அஷ்டதீப வழிபாடு சிறப்பு பூஜைகளும், ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகளும் ஆகிய முப்பெரும்விழா தவத்திரு. துர்க்கை உபாசகர் ஸ்ரீஜெயபால் சுவாமிகள் முன்னிலையில் மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா பற்றி திருக்கோயில் நிர்வாகிகள் கூறுகையில்: ஸ்ரீவைகுந்தநாதர் சுவாமிகளின் அவதார திருக்காட்சிகள், பள்ளி கொண்ட ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீலட்சுமி ஹயக்கிலீறிவர், ஸ்ரீசுதர்ஸனமூர்த்தி, ஸ்ரீவைகுந்த ஏகாதசி என்றால் ஸ்ரீரங்கநாதர் சுவாமி தான் நினைவுக்கு வரும். ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ளது போலவே நமது திருக்கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நாளன்று எண்ணற்ற பக்த கோடிகளுக்கு ஸ்ரீ அரங்கநாதசுவாமியின் அருள்காட்சியும், அதனுடன் அருளாசியும் கிடைக்கின்றது. அன்றைய தினம் அஷ்டாட்சா மந்திரம் ஸ்ரீநாராயண சுவாமிக்கு, அஷ்ட தீபவழிபாடு பூஜை சௌபாக்கிய தீபமாகும். விரத்தில் சிறந்ததும் மேலானதும் ஸ்ரீவைகுந்த ஏகாதசி விரதமாகும். அன்று சொர்க்கவாசலில் நுழைந்து ஸ்ரீஅரங்கநாதரை தர்சித்து ஸ்ரீலட்சுமிநாராயணன் திருப்பாதத்தில் எட்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிப்பட்டால் முன்வினை செய்த பாவங்கள் நீங்கி, தீர்கசுமங்கலி வரம் பெற்று சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று புராணம் கூறுகின்றது.
இந்த பாக்கியத்தை பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு ஸ்ரீஅரங்கநாத சுவாமியின் திருவருள் பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அன்று இத்திருக்கோவிலில் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையும், ஸ்ரீமகாமேரு சிறப்பு அர்ச்சனையும், ஆயுசு ஹோமமும் நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு 044-26536606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி விழா ஏற்பாடுகள் செய்து வரும் திருக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts