சென்னை ஜெ.ஜெ.நகர் மேற்கு முகப்பேர் 4வது பிளாக்கில் அருள்மிகு ஓம் சிவசக்தி அம்மன் ஆலயம், ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் அருள்புரிந்து வரும் ஸ்ரீவீரபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஸ்ரீஅனுமன் ஜெயந்தி திருவிழா இன்று 12ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் 11 தினங்கள் கொண்டாடப்படுகிறது. விழாவில் இன்று முதல்நாள் 12ம் தேதி வெள்ளிகிழமை மூலவர் சுவாமிக்கு வெண்ணெய்காப்பு, 2ம் நாள் 13ம்தேதி சனிக்கிழமை செந்தூரகாப்பு, 3ம் நாள் 14ம் தேதி ஞாயிறு அன்று முத்தங்கி சேவை, 4ம் நாள் 15ம் தேதி திங்களன்று வெற்றிலைக்காப்பு, 5ம் நாள் 16ம் தேதி செவ்வாய்கிழமை புஷ்பங்கி சேவை, 6ம் நாள் 17ம் தேதி புதன்கிழமை பழஅலங்காரமும், 7ம் நாள் 18ம் தேதி வியாழக்கிழமை 1008 (ஆயிரத்து எட்டு) வடைமாலை அலங்காரமும், 8ம் நாள் 19ம் தேதி வெள்ளிக்கிழமை லட்டு அலங்காரமும், 9ம் நாள் 20ம் தேதி காய்கறி அலங்காரமும், 10நாள் 21ம் தேதி ஞாயிற்றுகிழமை சுவாமிக்கு வெள்ளி கவசமும், 11ம் நாள் 22ம் தேதி திங்கள்கிழமை சந்தனகாப்பு ஆகிய சிறப்பு அலங்காத்தில் மூலவர் சுவாமி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
திருக்கோயில் நிர்வாகிகள் கூறுகையில்: விழாவில் 6ம் நாள் 17ம் தேதி புதன்கிழமை முதல் 10நாள் 21ம் தேதி ஞாயிற்றுகிழமை வரையில் ஸ்ரீவிரபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு லட்சார்ச்சனை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் 11தினங்கள் நடைபெறுகிற, ஸ்ரீஅனுமன் ஜெயந்தி விழாவிலும், லட்சார்ச்சனை சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்று பலவிதமான துன்பங்கள் நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்க வேண்டியும், விழா ஏற்பாடுகள் செய்து வரும் திருக்கோவில் ட்ரஸ்டு நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment