ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் காவல்நிலையம் அருகில் 1வது பிளாக்கில் ஸ்ரீ சர்வ சக்தி துர்கை கணபதி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா 21.12.2014 ஞாயிற்று கிழமை அன்று நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் தனிசன்னதி அமைத்து அருள்புரிந்து வரும் 9அடி உயரமுள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 10,008 (பத்தாயிரத்து எட்டு) வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. விழா அன்று காலை 9மணியளவில் ஸ்ரீதுர்கை கணபதி சிறப்பு ஹோமங்களும், 11மணியளவில் சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. மதியம் 12மணியளவில் சமபந்தி அன்னதானமும், மாலை 5 மணியளவில் ஸ்ரீ சகரஸ்ரநாம அர்ச்சனை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. மாலை 6மணியளவில் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு பட்டு அங்கவஸ்தரமும், பூமாலை, வெற்றிமாலை, துளசி மாலை மற்றும் 10,008 (பத்தாயிரத்து எட்டு) வடை மாலைகளையும் சாற்றி மகாதீபாராதனையும் நடைபெறயுள்ளது.
ஆலய நிர்வாகிகள் கூறுகையில்: ஸ்ரீசனி பகவானால் ஏற்பட்ட எண்ணற்ற இன்னல்களை நீக்கி, சகல செல்வங்களையும் தந்தருளும் ஸ்ரீசீதாலட்சுமி ஸ்ரீராமனின் தீவிர பக்தனான சொல்லின் செல்வன், ஸ்ரீமாருதி, ஸ்ரீஆஞ்சநேயன் போன்ற பலபெயர்களை கொண்ட ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 10,008(பத்தாயிரத்தி எட்டு) வடைமாலை அணிவிக்க தேவையான உளுத்தப்பருப்பு, எண்ணெய், மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகிய பொருட்களை வழங்கி ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் சுவாமி அருளாசி பெற வேண்டியும், விழாவிற்கு பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொள்ளும் படியும் விழா ஏற்பாடுகளை செய்து வரும் ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment