Tuesday, 16 December 2014

ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் ஆடிய கோவிலில் சனிப்பெயர்ச்சிவிழா


சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7- வது மண்டலம் 91-வது வார்டு ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7எச் பஸ் நிலையம் அருகில் பிரசித்திபெற்ற அருள்மிகு நவக்கிரகநாயகி அன்னை கருமாரிஅம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் நேற்று செவ்வாய்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழா அன்று நண்பகல் 12மணியளவில் ஸ்ரீகணபதி ஹோமம், சிறப்பு ஸ்ரீநவக்கிரக சாந்தி ஹோமமும், ஸ்ரீசனிஈஸ்வர பகவானுக்கு நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் மகாதீபாதனையும் நடைபெற்று சிறப்பு அலங்கரத்தில் ஸ்ரீசனிஸ்வரபகவான் மற்றும் ஸ்ரீநவக்கிரக சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts