Tuesday, 9 December 2014

நொளம்பூர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் கோயிலில் 7&ம் ஆண்டு 10 தினங்கள் ஸ்ரீஅனுமன் ஜெயந்தி விழா

சென்னை ஜெ.ஜெ.நகர் மேற்கு முகப்பேர் அருகேயுள்ள பெரிய நொளம்பூர் வெள்ளாளர் தெருவில் 600 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுந்த நாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தில் அருள்புரிந்து வரும் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 7ஆம் ஆண்டு ஸ்ரீஅனுமன் ஜெந்தி விழா 10 தினங்கள் கொண்டாடப்பட உள்ளது. விழா 12.2.2014 வெள்ளி கிழமை முதல் 21.12.2014 ஞாய¤ற்றுக்கிழமை வரையில் நடைபெறுகிறது. விழா முதல் நாள் 12ம் தேதி வெள்ளி கிழமை மூலவர் சுவாமிக்கு செந்தூர காப்பு, 2ம் நாள் 13ம் தேதி சனிக¤ழமை வெண்ணெய் காப்பு 3ம் நாள் 14.12.2014 ஞாயிற்றுகிழமை புஷ¢ப அலங்காரம், 4ம் நாள் 15.12.2014 திங்கட் கிழமை வெற்றிலை காப்பு, 5ம் நாள் 16.12.2014 செவ்வாய் கிழமை லட்டு அலங்காரம், 6ம் நாள் 17.12.2014 புதன் கிழமை வடை மாலை, 7ம் நாள் 18.12.2014 வியாழக்கிழமை பழ அலங்காரம், 8ம் நாள் 19.12.2014 வெள்ளி கிழமை முத்தங்க¤ சேவை, 9ம் நாள் 20.12.2014 சனிக்கிழமை காய்கறி அலங்காரம், 10ம் நாள் 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை வெள்ளி கவசம் ஆகியவை மூலவர் சுவாமிக்கு சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

19ம் தேதி வெள்ளி கிழமை முதல் 21ம் தேதி ஞாயிற்று கிழமை வரையில் காலை 10 மணியளவில் லட்சார்ச்சணை நடைபெறுகிறது. மாலை நேரங்களில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் ஆன்மீக மகளிர் குழுவினர்களின் இன்னிசை நிகழ்ச்சியும், பஜனை நிகழ்ச்ச¤களும் நடைபெற உள்ளது. விழா பற்றி கோயில் நிர்வாகிகள் கூறுகையில்: ஸ்ரீமத்ராமாயணத்தில் மிக முக்கியமானது. சுந்தர காண்டம், ஆஞ்சநேயரின் பெருமைகளையும், அற்புதங்களையும், சொல்லும் சுந்தர காண்டத்தை தினமும் படித்தால் தடைகள் விலகும். எண்ணங்கள் ஈடேறும் என்பது ஐதீகம். எளிமையான முறையில் சுந்தர காண்டம் முழுவதையும் பாராயணம் செய்து ஸ்ரீஅனுமன் ஜெயந்தி விழா அன்று சொல்லுங்கள். நினைத்த காரியம் வெற்றி அமையும். மேலும் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, ஏனைய காப்புகள் அணிவித்து, மனதில் வேண்டிய வரங்களை பக்தர்களுக்கு வழங்கி வரும். ஸ்ரீபக்த ஆஞ்சநேயரின் ஜெயந்தி விழா 10 தினங்கள் நடைபெறும் நாட்களில் பக்தர்கள் பங்கேற்று அனைத்து செல்வங்களையும் பெறும்படி விழா ஏற்பாடுகள் செய்து வரும் கோயில் நி£¢வாகிகள் கூறியுள்ளனர்.

 மற்றும் லட்சார்ச்சணை ரூ. நூறு கட்டணமாகவும், பூஜைகளுக்கும் ஆலய திருப்பணிகளுக்கும், நன்கொடை அளித்து ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் சுவாமியின் பேரருளை பெறும்படியும், மேலும் விபரங்களுக்கு 9283119460 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts