Monday, 8 December 2014

ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேரில் சனிப்பெயர்ச்சி விழா: ஸ்ரீஐயப்பன் 18படி பூஜை, மலர்பூஜை விழா

சென்னையில் புகழ் பெற்ற திருக்கோவில்களில் ஒன்றான அருள்மிகு நவக்கிரக நாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோவில் ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7எச் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் 16.12.2014 செவ்வாய்கிழமை சனிப்பெயர்ச்சிவிழாவும், 18படிகள் அமைத்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வரும் ஸ்ரீஐயப்பன் சுவாமிக்கு 18படி திருவிளக்கு மலர் பூஜை விழாவும் நடைபெறவுள்ளது. விழா அன்று காலை 8மணியளவில் ஸ்ரீஐயப்பன் சுவாமிக்கு சிறப்ப நெய்அபிஷேகம் மகாதீபராதனைவும் நடைபெறுகிறது. நண்பகல் 12மணிளவில் ஸ்ரீகணபதி ஹோமம், சிறப்பு ஸ்ரீநவக்கிரக சாந்தி ஹோமமும், ஸ்ரீசனிஈஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மகாதீபாதனையும் நடைபெறள்ளது. சிறப்பு அலங்கரத்தில் சனிஈஸ்வர பகவான் மற்றும் ஸ்ரீநவக்கிரக சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

மாலை 6மணியளவில் 18படிகள் உயரத்தில் சன்னதி அமைத்து பக்தர்க்கு அருளாசி வழங்கிவரும் ஸ்ரீஐயப்பன் சுவாமிக்கு 18படி பூஜையும், மலர்பூஜையும் மந்திரங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் விழா நடைபெற உள்ளது  விழா பற்றிய திருக்கோவில் நிர்வாகிகள் கூறுகையில்: ஸ்ரீ சனிபகவான் சிவபெருமானால் ஸ்ரீசனி ஈஸ்வரன் என்று ஆசீர்வதிக்கப்பட்டவர். வாழ்க்கையில் நேர்மையடனும், தெய்வபக்தியுடனும், வாழ்ந்து வரும் பக்தர்களுக்கும், பொதுவானவர்களுக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் அசுப பலன்கள் வெகுவாக குறைப்பதற்கு ஸ்ரீசனிஈஸ்வர பாகவனை அபிஷேக அர்ச்சனை செய்து மனமுருக வேண்டியபவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகும் என்றும், சுப பலன்கள் அடையும் ராசிகள் மிதுனம், கன்னி, மகரம், மத்திபலன் அடையும் ராசிகள் மீனம் கடகம், கும்பம் ராசிகளும் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்: மேஷம், ரிஷிபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசியுடைவர்கள். இத்திருக்கோவிலில் நடைபெறுகிற சிறப்பு பரிகார பூஜையில் கலந்து கொள்ளும்படியும் கூறியுள்ளார்கள். மேலும் பக்தர்களுக்கு வேண்டிய வண்ணம் பேரருளையும், பொருளையும், வாரி வழங்கும் 18படிகள் உயரத்தில் அமைத்து தனிசன்னதியுடன் அருள்புரிந்து வரும் ஸ்ரீஐயப்பன் சுவாமியின் 18படிபூஜை மற்றும் மலர்பூஜை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதாக திருக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பூஜைக்கு வேண்டிய நெய், எண்ணெய், புஷ்பம் ஆகியவைகள் திருக்கோவியில் உபயம் செயய் வேண்டியும், ஸ்ரீஐயப்பன் சுவாமியின் பேரருளையும், ஸ்ரீசனிஈஸ்வரன் நல்லாசியுடன் எல்லா வளரும், நலமும பெற்றுவாழ பகத் கோடிகள் இவ்விழாவில் கலந்து கொள்ளம்புடி இவ்விழா ஏற்பாடுகள் செய்துவரும்  திருக்கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts