சென்னையில் புகழ்மிக்க திருக்கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ நவக்கிரகநாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோவில் ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7எச்&பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இத்திருகோவிலில் அருள்புரிந்து வரும் 41அடி உயர ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழா 22.12.2014 திங்கள்கிழமை நடைபெற உள்ளது. விழா அன்று ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமிக்கு ஒருலட்சத்து எட்டு வடை மாலை, ஜாங்கரி மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, லட்டு மாலை, தேங்காய் மாலை, வாழைபழம், மாலை, சாத்துக்குடி பழம் மாலை, எலுமிச்சபழம் மாலை, ஆகிய மாலைகள் சாற்றி மகா தீபாதரனை நடைபெற உள்ளது. விழா அன்று காலை 8 மணியளவில் ஸ்ரீபக்த ஆஞ்சனேயா சுவாமிக்கு சிறப்பு யாக பூஜையும், மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். உற்சவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ரதத்தில் ஆலயம் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தருளுகிறார். மதியம் அன்னதானம் நடைபெறவுள்ளது.
மாலையில் 41அடி உயர ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமிக்கு அனைத்து வகையான மாலைகளும் அணிவித்து மேளதாளங்களுடன் மகாதீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் ஸ்ரீஅனுமன் மகிமை ஆன்மீக சொற்பொழிவு நடைபெற உள்ளது. ஆலய நிர்வாகிகள் கூறுகையில்: சர்வ வல்லமை படைத்த வாயுவின் அம்சமாக நம் கண்களுக்கு தோன்றியவர். ஸ்ரீ அனுமன் ஆவார். மார்கழி மாதத்தில் அமாவாசை திதியில் மூல நட்சத்திரத்தில் வாயு பகவானுக்கும், அஞ்சனை தேவிக்கும் மகனாக அவதரித்த நாளே ஸ்ரீ அனுமந் ஜெயந்தி நாளாக போற்றி வழிபட்டு வருகின்றோம். மாதங்களில் நான¢ மார்கழி என மாதவன் திருவாய் மலர்ந்திருந்ததின் நோக்கமே தனது தீவிர பக்தனான ஸ்ரீஅனுமன் பிறந்த மாதம் என்பதால் தான் என்றால் அது மிகை ஆகாது. உலகமெல்லாம் உள்ள வைணவர்கள், மட்டுமின்றி அனைத்து இந்து மக்களும் போற்றி மகிழும் நாள் அனுமந் ஜெயந்தி பாவங்களில் இருந்து விடுதலை செய்பவர் என பொருள்படும் “பவமானர்” என்றும் கவிகளின் அரசன் என்ற பொருளில் “கபீஷர்” என்றும் வேதங்களில் அனுமனுக்கு இரு பெயர் உள்ளது. மேலும், ராமபக்தர் ஸ்ரீபக்த ஆஞ்சனேயர், வாயுபுத்திரர், அஞ்சனை மைந்தர், ஆஞ்சநேயர், ஹனுமன் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். ஸ்ரீஅனுமன் ஸ்ரீ அனுமனுக்கு மிகவும் பிரீத்தியானது வடைமாலை எனவே 41அடி உயர ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு ஒருலட்சத்து எட்டு வடைகளை தட்டி ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவிப்பதால் ராகு, கேதுவினால் ஏற்பட்ட தோஷத்தில் இருந்து விடுதலை பெறலாம். வெளிநாடு தொடர்பில் லாபம் கிட்டும். மகாலட்சுமி அருகில் இருந்து காப்பாள் சனி கிரகதோஷம், சூரிய செவ்வாய் கிரக தோஷம் நீங்கும். தைரியமும், ஆரோக்கியமும் பெருகும். ஆயுள் நீடிக்கும். வெற்றிலை மாலை அணிவித்தால் புத்திபலம், மனோதைரியமும், துளசிமாலை அணிவித்தால் லெட்சுமிகடாஷ்சமும், கல்வியும்பெருகும்.
வெண்ணெய் காப்பு, செந்தூரகாப்பு சாற்றுவதால் ஆயுள்பெருகும். பக்தர்கள் மாதந்தோறும் அமாவாசை தினங்களில் மட்டைதேங்காய் பிரார்த்தனை வேண்டி கட்டுவதால் திருமணத்தடைகள் நீங்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி அடையும். இவ்வாறு பக்தர்களுக்கு வறுமை, கடன், தரித்திரம், துரதிருஷ¢டங்களை நீக்கி, வரங்கள் பல வழங்கி அருளாசி தந்தருளும் 41அடி உயர ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தகோடிகள் அனைவரும் விழாவில் கலந்துக்கொண்டு 41அடி உயர ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமியின் அருளாசி பெரும்படியும் விழா ஏற்பாடுகளை செய்துவரும் ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment