Saturday, 20 December 2014

41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்திவிழா

சென்னையில் பிரசித்திபெற்ற திருக்கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீநவக்கிரகநாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோவில் ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7எச்-பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு அருள்புரிந்து வரும் 41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 22-ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 8.00மணியளவில் சிறப்பு யாகப்பூஜையும், மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். உற்வர் சுவாமி ரதத்தில் ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்துதருள்கிறார். அன்னதானமும் நடைபெறுகிறது.

 மாலையில் 41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,00,008 (ஒரு லட்சத்தி எட்டு) வடைமாலை, ஜங்கிரிமாலை, லட்டுமாலை, வெற்றிலைமாலை. துளசிமாலை, தேங்காய்மாலை, வாழைப்பழம்மாலை, எலுமிச்சைமாலை, சாத்துகுடிமாலை ஆகிய மாலைகளை சுவாமிக்கு சற்றி மேளதாளங்களுடன் மந்திரங்கள் முழங்க மகாதீபாரணையும், சிறப்புப்பூஜைகளும் நடைப்பெறுகிறது. முன்னதாக 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமாவாசை அன்று ஹோமபூஜைகளும், மஹாதீபாரணையும், மட்டைதேங்காய் பிராத்தனை வேண்டி கட்டுதல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

 அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு திருக்கோவிலில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் ஆன்மிக குழுவினர்கள் தீவிரமாக விழாவிற்கு தேவையான மாலைகள் தயாரிக்கும் பணியும் 9அடி உயரமுள்ள சுவாமியின் கெதய் சீரமைக்கும் வேலைகளிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் 41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயா; சுவாமிக்கு அணிவிக்கும் மாலைகள் அனைத்துக்கு தேவையான பொருட்களை தந்து சுவாமியின் அருளாசி பெறவேண்டியும் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படியும் விழா ஏற்பாடுகளை செய்து வரும் திருக்கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts