சென்னை ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7எச்-பஸ் நிலையம் அருகில் அருள்மிகு ஸ்ரீநவக்கிரகநாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு அருள்புரிந்து வரும் 41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 22-ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 8.00மணியளவில் சிறப்பு யாகப்பூஜையும், மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெண்ணெய் காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி கொடுத்தார். இதில் அன்னதானமும் நடைபெற்றது. 41அடி உயரமுள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,00,008 (ஒரு லடச்த்தி எட்டு) வடைமாலை, ஜங்கிரிமாலை, லட்டுமாலை, வெற்றிலைமாலை. துளசிமாலை, தேங்காய்மாலை, வாழைப்பழம்மாலை, எலுமிச்சைமாலை, சாத்துகுடிமாலை ஆகிய மாலைகளை சுவாமிக்கு சற்றி மேளதாளங்களுடன் மந்திரங்கள் முழங்க மகாதீபாரணையும், சிறப்புப்பூஜைகளும் நடைப்பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment