Wednesday 6 April 2011

சட்டமன்ற வேட்பாளர்கள் கவனத்திற்கு


அண்ணாநகர், மற்றும் அண்ணாநகரின் ஒருசில பகுதிகளை உள்ளடக்கிய வில்லிவாக்கம் தொகுதிகளில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர்களின் கனிவான பார்வைக்கும், தேர்தலில் வெற்றிபெரும் வேட்பாளரின் முதன்மையான நடவடிக்கைகட்டும் படைக்கப்படுகின்றது.

''முத்தமிழ் அரங்கம்''

அண்ணாநகரில் பல கோடி ரூபாய் செலவில் சென்னை மாநகராட்சியால் முதல்தரமான அரங்கம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இவ்வரங்கம் சென்னையிலுள்ள மற்ற அரங்கங்கள் போன்று இயங்காது, தமிழ் தமிழிசை, நாடனம் என முத்தமிழின் «ம்மபாட்டிற்காக இயங்க வேண்டும். இவ்வரங்கத்தை, கடந்த இரண்டு  நூற்றாண்டுகளாக அயராது, தொடர்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் அரசர் அண்ணாமலை மன்றத்திடமோ அல்லது தமிழ், இசை நாடகமன்றத்திடமோ ஒப்படைக்கலாம். கடந்த நூ£ற்றாண்டில் தனித்தமிழ் மற்றும் தமிழிசைக்காகப் பாடுபட்ட தமிழ்ச் சான்றோர்களான மறைமலை அடிகள், நாவலர். சோமசுந்தர, பாரதியார், பாவேந்தர், பாரதியார், கல்கி, இராஜாஜி, பாவாணர், செட்டி நாட்டரசர்கள், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார், அறிஞர். அண்ணா போன்றோரின் நினைவைப் போற்றும் வகையில் இவ்வரங்கம் அமைதல் வேண்டும். இதுதொடர்பாகத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை, தலைநகர் தமிழ்ச்சங்கம், ஒய்.எம்.சி.ஏ, பட்டிமன்றம் போன்ற அனைத்து அமைப்புகளும் தொடர் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

''நூல் நிலையம்''
அண்ணாநகர் கிழக்கிலும், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்திலும் இருகிளை நுலகங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆனால், ஏறக்குறைய 30,000 மக்கட்கு மேல் வசிக்கும் அண்ணாநகர் மேற்குப் பகுதியில் கிளை நுலகம் அமைக்கப்படவில்லை. எனவே அண்ணாநகர் மேற்குப் பகுதியில் கிளை நுலகம் அமைப்பதற்கான பணிகள் உடனடியாக துவக்கப்படவேண்டும். இந்நூலகம் கட்டுவதற்காக 'யி' பிளாக்கில் உள்ள மாநகராட்சிப் பூங்காவிற்கு அருகில் உள்ள காலி இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிதித்தேவைக்குச் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தலாம். எனவே இது ஒரு உடனடியான சாத்திக்கூறு!

''அண்ணாநகர்த் தொடர்வண்டி நிலையம்''
அண்ணாநகர், பாடி மேம்பாலப்பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் வாகனங்கள் பயன் பாட்டிற்காக மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், அண்ணாநகர் தொடர்வண்டி நிலையம் இயக்கப்படவில்லை. எனவே இந்நிலையம் மீண்டும் இயங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், காலை, மதியம், மாலை, இரவு ஆகியநான்கு வேளைகளிலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை ஆகிய இடங்களுக்கு இருமுறைகள் தொடர்வண்டிகள் இயக்கப்பட வேண்டும்.

''ஓட்டேரி நல்லாமற்றும் கூவம்நதி''
'ஓட்டேரி நல்லர் மற்றும் கூவம்: அண்ணாநரின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் ஓடும் இவ்வோடைகளில் கழிவு நீர் கலக்கப்படுவதால், இப்பகுதி மக்கள் அடையும் துயரத்திற்கு அளவே கிடையாது. இவ்விரண்டும் துர்நாற்றத்துடன் கொசு உற்பத்தி செய்யும் இடங்களாகவும் உள்ளன. எனவே உடனடியாக சென்னை மாநகராட்சி மாநில அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து இச்சீர் கேட்டைச் சீர் செய்ய வேண்டும் இது உடனடித்தேவை.

''சாலைகளும், பாதசாரிகளும்''
அண்ணாநகரிலுள்ள முதன்மையான சாலைகளில் காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் வயதான முதியவர்களும், கல்லுரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களும், பணிக்குச் செல்பவர்களும், பணியிலிருந்து திரும்புபவர்களும் சாலையைக் கடந்த செல்பவர்களும், மிகவும் அல்லல் படுகின்றனர். நடைபாதைகளில் நடப்பதற்குரிய நேரங்களில் கூட வாகன ஓட்டிகள் இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை! பயந்துதான் சாலைகளைக் கடக்க வேண்டுயுள்ளது. எனவே நடந்து செல்பவர்களின் வசதிக்காக ஆங்காங்கே மேம்பாலங்கள் அமைக்கப்பட (நுங்கம்பாக்கத்தில் உள்ளது போன்று) வேண்டும். மேலும் காவல்துறையின் போக்குவரத்துறை தேவையான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விருக்கின்றேன்.

வி.நாகசுந்தரம்                                                                       
திருஞான சம்பந்தர் நூலகம்
நெ.901, அண்ணாநகர் மேற்கு,
சென்னை-40. தொ.நெ.26164387. 

No comments:

Post a Comment

Annanagar Daily posts