Saturday 21 April 2018

ஆண்டின் கலைப் பண்பாட்டுப் பெருவிழா

வேலம்மாள் வித்யாலயா பருத1திப்பட்டில் 18.04.2018 புதன்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கலைப் பண்பாட்டுப் பெருவிழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக இசைப்பாடகர் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களும், நடன இயக்குநர் ஷெரிப் மொய்தீன் அவர்களும் வருகை தந்து விழாவை இனிதே துவக்கி வைத்தனர். 
 
சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் கல்வியோடு இணைந்து கலைத்துறையையும் வளர்க்கும் வேலமமாள் பள்ளியின் புகழ் நம் நாட்டில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் பரவியுள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிக் கொடி நாட்டிய மாணவர்களின் திறமை பார் போற்றும் வல்லமை பெற்றது என்று கூறினார்கள். 
 
அத்துடன் கல்வியோடு கலை பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு கேடயங்கள் வழங்கிப் பாராட்டினர். அதனையடுத்து பள்ளியின் கலை விழா ஆண்டு அறிக்கையை பள்ளி மாணவர்கள் முத்தாய்ப்பாய் எடுத்துரைத்தனர். மேலும் இவ்விழாவில் மூலம் ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறனையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ள
இவ்விழா ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்த மாணவர்களின் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் அனைவரின் மனதிலும் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

No comments:

Post a Comment

Annanagar Daily posts