Monday 2 April 2018

முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் அறிவியில் மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு புகழஞ்சலி செலுத்தினர்

இன்றைய நூற்றாண்டில் அறிவின் விருட்சாமாய் அறிவியல் கருவூலமாய் நம்மிடையே வாழ்ந்து சமீபத்தில் மறைந்த அறிவியல் மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக முகப்பேர் வேலம்மாள் பள்ளி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் குழுக் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை நடத்தினர். இக்கலந்துரையாடலில் இந்த நூற்றாண்டின் இணையற்ற மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங் அறிவியல் தூதராகவும் அறிவியல் விஞ்ஞானியாகவும் வாழ்ந்து அறிவியல் உலகிற்கு அர்ப்பணித்துள்ள கொடைகளைப் பள்ளி மாணவ மாணவியர் சிறப்பாக விவாதித்தனர். பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் அறிவியலாளர் ஸ்டீபனின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Annanagar Daily posts