Saturday 17 March 2018

சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் பன்னாட்டு ஒலிம்பியாட் போட்டியில் மாபெரும் சாதனை

சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஹிமான்சுராஜ் STD-VI மற்றும் பி.கே.நதீஷ் STD-VIII ஆகியோர் பன்னாட்டு ஒலிம்பியாட் போட்டியில் மாநில அளவில் 2 மற்றும் 6 ஆம் இடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் மட்டுமல்லாது இம்மாணவர்கள் தேசிய அளவிலும் 145 மற்றும் 191 ஆம் இடங்களை பெற்றுச் சாதனை புரிந்துள்ளர். இப்போட்டியில் உலக அளவில் 395 பள்ளிகளிலிருந்து 11840 மாணவர்கள் கலந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு மாணவர்களையும் பள்ளி நிர்வாகத்தினர் வெகுவாகப் பராட்டினர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts