Saturday 17 March 2018

போன்சாய் வளர்ப்பு (குட்டை மரங்கள்) மற்றும் சிறுதானிய உணவுகள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் 21.03.2018 (புதன்கிழமை) அன்று போன்சாய் வளர்ப்பு மற்றும் 22.03.2018 (வியாழக்கிழமை) அன்று சிறுதானிய உணவுகள் தயாரிப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இப்பயிற்சியானது நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts