Wednesday, 31 January 2018

தேசிய அளவிலான கணிதவியல் ஒலிம்பியாட் தேர்வில் வேலம்மாள் வித்யாலாயா பள்ளி மாணவன் முதலிடம் பெற்றார்

மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலாயா பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் ஸ்ரீ விஷ்னு தேஜாதேசராஜு சமீபத்தில் தேசிய அளவில் நடைபெற்ற கணிதவியல் ஒலிம்பியாட் தேர்வில் முதலிடம் பெற்றுச் சாதனை புரிந்தார். சாதனை புரிந்த மாணவனுக்கு மடிக்கணினி, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பெங்களூரு கல்வித் துறையின் சார்பாக தேசிய ஆசிரியர் குழுமம் நடத்திய இப்போட்டியில் இந்திய 20 மாநிலங்களில் உள்ள 3000 பள்ளிகளிலிருந்து 3,00000 மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது. மாணவனின் இச்சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts