Friday, 15 December 2017

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 முகப்பேர் வேலம்மாள் பள்ளி கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு மிகப் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் தின விழாவினை 12.12.2017 அன்று பள்ளி வளாகத்தில் கொண்டாடியது. இவ்விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் வர்ணக்கோலங்கள் பூண்டு கிறிஸ்துவின் பிறப்பினை பிரம்மாண்டமான காட்சிக்களாக மாற்றியிருந்தனர். ஆசிரியர்கள் மெல்லிசைக் குழுவினர் போன்று இன்னிசை பாடி குழந்தைகளை மகிழ்வித்தனர். மாணவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தன. கிறிஸ்துமஸ் மரங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. சிறந்த கிறிஸ்துமஸ் மரத்திற்கான போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. கிறிஸ்துமஸ் குடில்கள் அலங்கரிப்பில் பங்கு பெற்று தங்களது சிறப்பான பங்களிப்பினை நல்கினர்.

மேலும் பள்ளியில் நடைபெற்ற இக்கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் விழாவினைக் கண்முன் நிறுத்துவதாக அமைந்தது.


No comments:

Post a Comment

Annanagar Daily posts