வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் ஆகஸ்டு 22 அன்று ‘சென்னை விழா’ என்னும்
விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் சென்னை
நகரத்தின் பாரம்பரியத்தையும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சென்னை நகரத்தின்
பழம்பெருமையையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பல்வேறு சுவையான
தகவல்கள் சொல்லப்பட்டன. இக்கருத்தரங்கத்திற்குச் சென்னை பத்திரிக்கையாளர்
கூட்டமைப்பின் தலைவர் ரங்கராஜ் அவர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு சென்னை
நகரத்தின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் பற்றிய செய்திகளை எடுத்துக் கூறி
விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இக்கருத்தரங்கம் மாணவ சமுதாயத்திற்கு
மிகவும் பயனள்ளதொரு நிகழ்வாகவும் சிறந்ததொரு படிப்பினையாகவும் அமைந்தது.
No comments:
Post a Comment