சென்னை, அயப்பாக்கம் தமிழகத் தமிழ்ப்
பேரவையின் 35-ஆம் ஆண்டு திருவள்ளூவர் விழா, அம்பத்தூர், திருமால் திருமண
மண்டபத்தில் 05.03.2017 அன்று நடைபெற்றது. பேரவைத்தலைவர், ‘குறள்
நெறிச்செம்மல்’ புலவர் இலக்குவனார், விழாவிற்குத் தலைமை ஏற்று நடத்தினார்.
30 பள்ளி மாணவ, மாணவியர் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
1330
குறட்பாக்களைக் கூறிய 15 மாணவ, மாணவியர்க்குக் ‘குறள் மாமணி’ என்ற விருத
வழங்கப்பட்டது. அரசுத் தேர்வில் சாதனை படைத்த 10 மாணவ, மாணவியர்க்குச்
‘சாதனைச் செல்வர்’ என்ற விருது வழங்கிப் பாராட்டப்பட்டது. திருக்குறள்
இசைப்பாடலுக்கு நடனமாடிய 5 மாணவியர்களுக்கு ‘நாட்டியச் செல்வி என்ற விருது
வழங்கப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்ட 150 மாணவர்களுக்குப் பாராட்டு
மடலும், திருக்குறள் நூலும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment