Thursday, August 4, 2016

முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு தமிழ்ச் சுடர் விருது

அம்பத்தூர் கம்பன் கழகம் சார்பில், அம்பத்தூர், வெங்கடாபுரத்தில் உள்ள திருமால் திருமண மண்டபத்தில் வினாடி வினா நிகழ்ச்சி 31.07.2016 மாலை நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் முனைவர் திரு.சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு தமிழ்ச் சுடர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பக்தியாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகச்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்று வங்கி அமைப்பின் விதை கலாம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிஞர்.திரு.காசிமுத்து மாணிக்கம், திரு.பள்ளத்தூர் பழ. பழனியப்பன், தமிழ் திரைப்பட இயக்குனர் திரு.S.P.முத்துராமன் மரக்கன்று வங்கி அமைப்பின் தலைவர் திரு.கோ.முல்லைவனம், திரு.காமராஜர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts