கேழ்வரகு, திணை, சாமை, வரகு மற்றும் குதிரை வாலி ஆகிய பயிர்கள் குறுதானியப் பயிர்களாக வைக்கப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பயிரிடும் பரப்பளவு, தமிழகத்தில் மிகவும் குறைந்த அளவே உள்ளது. இந்த பயிர்கள் மலைப் பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. இது மண்வளம் குறைந்த பகுதிகளில் மானாவரிகளாக பயிரிடப்படுவதால் இதன் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இந்த பயிர்கள் குறைந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இவற்றில் உள்ள உணவுச்சத்துக்கள் மற்ற தானியங்களை காட்டிலும் மிகவும் சிறந்ததாக உள்ளதால் தற்போது பிரபலமடைந்து வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ‘‘சிறு தானிய உணவுகள் தயாரிப்பு’’ பற்றிய ஒரு நள் பயிற்சி ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் (11.08.2016) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044&26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்ப்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தொடர்பு கொள் வேண்டிய முகவரி, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண்.ஹி-30, 10வது தெரு, அண்ணாநகர் (ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகில் சென்னை & 600 040. தொலைபேசி எண்: 044&26263484.
No comments:
Post a Comment