Tuesday, 5 July 2016

இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டின் செயல்பாடுகளை, முதல்வர் ஜெயலலிதாவிடம் விளக்க, உணவு துறை முடிவு செய்து உள்ளது. தமிழகத்தில், ரேஷன் முறைகேட்டை தடுக்க, தற்போது புழக்கத்தில் உள்ள காகித அட்டைக்கு பதில், வங்கி ஏ.டி.எம்., கார்டு வடிவிலான, 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்து உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'ஆதார்' எண் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு செயல்பாடுகளை, முதல்வர் ஜெயலலிதாவிடம் விளக்க, உணவு துறை முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைக்கு வழங்கப்படும், ஆதார் விவரம் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரித்தல்; ரேஷன் பொருட்கள் வாங்கியதும், மொபைல் போன் வாயிலாக, எஸ்.எம்.எஸ்., அனுப்புதல்; ஸ்மார்ட் கார்டு செயல்பாட்டை கண்காணித்தல் என, அனைத்து பணிகளும், ஒரே நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts