Tuesday, 5 July 2016

ஜலதோஷத்தில் இருந்து பாதுகாக்க.

  • ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் சாம்பார் வெங்காயம் ஒன்று அல்லது இரண்டினை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் நன்கு மென்று தின்றுவிட்டு சுடுநீர் பருகிவிட்டு படுக்கைக்கு சென்றால் காலையில் ஜலதோசம் பறந்துவிடும்.
  •  கசகசாவை அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் ஜலதோசம் விலகும்.
     தேங்காய் எண்ணையை சுடவைத்து கற்பூரம் சேர்த்து கரைந்ததும் இளஞ்சூட்டில் நெஞ்சு, கழுத்து, கை, கால்களில் தடவ சளி குணமாகும்.
  • ஒரு துண்டு சுக்கை(ஞிக்ஷீஹ் நிவீஸீரீமீக்ஷீ) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
  • சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
  • பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து இரவில் படுக்கைக்கு செல்லும் முன்பு மிதமான சூட்டில் அருந்தினால், காலையில் ஜலதோசம் பறந்து போகும்.
  • மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தாலும் ஜலதோசம் குறையும்.
  • கற்பூர வள்ளி இலையை பறித்து தவாவில் வாட்டி சாறு பிழிந்து குழந்தைகளுக்கு கொடுக்க சளி தொல்லை தீரும்.
  • குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சிறிது பால் கொடுத்து விட்டு பிறகு சாறு கொடுக்க வாந்தி வரும் அதனுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்துவிடும். உடனே நிவர்த்தி கிடைக்கும்
  • ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் துளசி, சுக்கு, மிளகு, திப்பிலி, கற்பூரவள்ளி பயன்பாடுகள் எத்தகைய சளித்தொல்லையாக இருந்தாலும், உடனே நிவர்த்தி கிடைக்கும். சளியை விரட்டியடிக்கும்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts