Wednesday, July 27, 2016

தேசிய விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்பட்டோரிடம் இருந்து, தேசிய விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகம் சார்பில், 14 பிரிவுகளில், தேசிய விருது வழங்கப்படுகிறது.இதை பெற விரும்புவோர், ஜூலை, 31ம் தேதிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, www.disabilityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts