பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான ரூ.118 சிறப்பு திட்டம் தற்போது இளைஞர்களையும் கவர்ந்துள்ளதை அடுத்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் மாணவர்கள் எளிதில் தொடர்புகொள்ளவும், இணையதளத்தைப் பயன்படுத்தவும், இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தில் இணையத்தொடங்கி உள்ளனர்.
கலந்தாய்வு மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட ரூ.118 சிறப்புத் திட்டம் மாணவர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில், 30 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா வசதி, பிஎஸ்என்எல் அழைப்பிலிருந்து பிஎஸ்என்எல் அழைப்புக்கு 10 பைசா, குறுஞ்செய்திக்கு 15 பைசா என பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தத் திட்டத்தில் 1,700 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.அத்துடன் இளைஞர்கள், பணிபுரிவோர் ஆகியோரும் இதில் இணைய ஆர்வம் காட்டியுள்ளதன் பேரில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என பிஎஸ்என்எல் அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment