பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெற்றுள்ளவர்கள் வசதிக்காக ஒரு புதிய திட்டத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் அறிவித்தார். இலவச வீட்டு சேவை என்ற திட்டத்தின் மூலம் அதை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, செல்போன் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளை செல்போனில் பெற விரும்பாவிட்டால் வீட்டில் உள்ள லேண்ட் லைன் இணைப்பில் பெற முடியும். செல்போனில் பேசுவதை தவிர்க்கும் நபர்கள் வீட்டு இணைப்பில் பேசலாம். வீட்டு இணைப்புக்கு வரும் அழைப்புகள் அனைத்தும் செல்போன் போலவே தெள்ளத் தெளிவாக கேட்கும்.
வீட்டு அருகே சிக்னல் இல்லை என்று குறைபட தேவையில்லை. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. செல்போனில் இருந்து 4 வகையான வசதிகளை பெறமுடியும். கால் டைவர்ட், நீங்கள் பிசியாக இருக்கும் போது கால் டைவர்ட் ஆகும், உங்கள் செல்போனை ஆப் செய்து வைத்திருந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்காத இடத்தில் இருந்தாலோ கால் டைவர்ட் ஆகும், அழைப்பை கவனிக்காமல் இருந்தாலும் கால் டைவர்ட் ஆகும்.
No comments:
Post a Comment