மயில் போல் நன்னிறம் கொண்டதாகவும், அதேபோல் அழகான ஆடுவதாலும் இந்த சிலந்தி மயில் சிலந்தி என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள் 7 வகை புதிய சிலந்திகளை கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒன்றின் பெயர் மயில் சிலந்தி. மயில் போல நன்னிறம் கொண்டதாகவும், அவற்றைப் போல இவை அழகாக நடனமாடுவதாலும் இவற்றுக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மயில் சிலந்தி, தன் மூன்று ஜோடிக் கால்களையும் உயர்த்தி சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ஆடக்கூடியவை. அவை பார்க்க சிறியதாக இருந்தாலும், அவைபோடும் ஆட்டமோ சிறப்பு. ஆனால் அவற்றை கண்டு நீங்கள் பயப்படத்தேவையில்லை.அவை கடிக்காது.
No comments:
Post a Comment