பள்ளிக்கு மாணவர்கள் மிதி வண்டியில் வந்த காலம் போய் தற்போது மாணவர்கள் பைக், கார் என வர ஆரம்பித்துள்ளனர். இனி அவர்கள் பைக்கில் வரக்கூடது என பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்கள் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு டூ வீலர் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இந்த சுற்றறிக்கையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு மிதி வண்டியை தவிர வேறு எந்த இரு சக்கர வாகனங்களிலும் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும். அப்படி மீறியும் பைக்கில் வரும் மாணவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment