Friday, June 24, 2016

‘ரெமோ’ பர்ஸ்ட் லுக்... ரிலீஸ் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டிராக்கை, இயக்குநர் ஷங்கர் இன்று வெளியிட்டார். ரஜினிமுருகன் படத்துக்குப் பின் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ரெமோ. 45 கோடிகளுக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தை 24கிவி ஸ்டுடியோஸ் நிறுவனம் சொந்தமாகத் தயாரித்து வருகிறது. 
பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.  ரசூல் பூக்குட்டி, பி.சி.ஸ்ரீராம் என முன்னணி சினிமாக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில், பெண் உட்பட 3 வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இப்படத்தின் சிங்கிள் டிராக் மற்றும் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடும் விழா சென்னை தாஜ் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. விழாவில் 24கிவி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லோகோவை ஏவிஎம் சரவணன் திறந்து வைத்தார். படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts