Saturday, June 25, 2016

”ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’க்களை (பொலிவுறு நகரங்கள்) உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. அதில் முதல் கட்டமாக புனே, ஆமதாபாத், புவனேஸ்வர், ஜபல்பூர், கொச்சி, காக்கிநாடா, ஜெய்ப்பூர், சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டன. ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.1,770 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் தொடங்க உள்ளது.

இந்நிலையில் மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நேரடியாக துவங்கி வைத்தார். பிற நகரங்களில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts