Friday, June 24, 2016

இன்ஜினியரிங் படிப்பில் சேர கவுன்சலிங் இன்று ஆரம்பம்

இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் சேர்க்கைக்கான கவுன்சலிங் இன்று முதல் தொடங்குகிறது. முதல்நாளில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 524 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 9 இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் முதல் நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 113 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 994 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 3,812 விண்ணப்பங்கள் நீக்கப்பட்டது. மொத்த தகுதியான விண்ணப்பங்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 182 பேர். இதில் ஆண்கள் 80 ஆயிரத்து 910 பேர், பெண்கள் 50 ஆயிரத்து 272 பேர். முதல் தலைமுறை பட்டதாரிகள் 69 ஆயிரத்து 575 பேர்.

இந்நிலையில், இன்ஜினியரிங் படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான ரேங்க் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அண்ணாமலை பல்கலை வளாகத்தில் நடைபெறுகிறது. முதல்நாளில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு நடக்கிறது. இன்று நடக்கும் விளையாட்டு பிரிவு கலந்தாய்வுக்கு 1807 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 1519 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts