Wednesday, 22 June 2016

வருமான வரி முறையாக செலுத்தாவிட்டால் எல்பிஜி மானியம் ரத்து செய்யப்படும்

வருமான வரி முறையாக செலுத்த தவறினால், அவர்களது சமையல் எரிவாயுக்கான மானியத்தை ரத்து செய்வதோடு, பான் கார்டும் முடக்கப்படும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

வரிஏய்ப்பு செய்பவர்கள் மீது ஏற்கனவே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், வருமான வரி கட்டாதோர் பட்டியலில் உள்ள நபர்கள், வங்கியில் புதிதாக கடன் வாங்க முடியாது. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை ஏற்படுவதோடு வங்கிக் கணக்கு அடிப்படையில் இருக்கும் ஓவர் டிராஃப்ட் வசதி ரத்து செய்யப்படும்.

இந்நிலையில் மீதமுள்ள வரித் தொகையானது அவர்களின் கடன் பாக்கியாக கருதப்படும் என்று வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. மேலும், பான் கார்டு ரத்து செய்யப்படும் பட்சத்தில், வாங்கும் புதிய சொத்துகளை பதிவு செய்ய முடியாது. 

மேலும் 'சிபில்' அமைப்பில் இருக்கும் விவரங்களின் அடிப்படையில், வரி செலுத்தாதவர்களின் வங்கிக் கணக்கை கண்டுபிடித்து எரிவாயு மானியத்தையும் ரத்து செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts