Friday, 17 June 2016

குறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்

குறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும் போது மூக்கு மற்றும் தொண்டையின் வழியாக காற்றானது எளிதில் செல்ல முடியாமல் தடை ஏற்படும் போது எழும் சப்தம் தான் குறட்டை. பொதுவாக ஆண்கள் தான் அதிகமாக குறட்டை விடுவார்கள். குறட்டை யை சாதாரணமாக விடக்கூடாது.

அதை சரிசெய்ய முயலாவிட்டால், அதனால் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டி வரும். எனவே குறட்டை பிரச்சனை உள்ளவர்கள், அதனை சரிசெய்யும் முயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும்.

இங்கு குறட்டை பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் 3 உணவுகள் குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். ஆலிவ் ஆயில்  இந்த அற்புத எண்ணெயில் ஏராளமான நன்மைகள உள்ளது.

அதில் ஒன்று குறட்டை பிரச்சனையைப் போக்கும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து, இரவு தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும்.

புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி, அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளது. குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.

இல்லாவிட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஏலக்காய் இந்த அரேபியன் மசாலாப் பொருளானது, சமையலில் உணவிற்கு நல்ல மணத்தையும் சுவையையும் வழங்குவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. முக்கியமாக ஏலக்காய் சளியை இளகச் செய்து, சுவாச பிரச்சனைகளைச் சரிசெய்யும்.

அதற்கு தூங்குவதற்கு முன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு சிறிது நேரம் மெல்லவோ அல்லது ஒரு டம்ளர் நீரில் ஏலக்காயை தட்டிப் போட்டு, சிறிது பட்டை மற்றும் தேன் சேர்த்து கலந்து, குடித்து வரவோ செய்யலாம்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts