Friday, May 27, 2016

ரயிலில் ரிசர்வேசன் செய்தால் விமானத்தில் பறக்கலாம்

ரயிலில் முன்பதிவு செய்தால், விமானத்தில் பயணம் செய்யலாம். இது நம்ம இந்தியாவில் தான்.
  
சரி, இனி விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி  செல்லும் பயணம் ரயில் பயணம்.

ஆனால், திருவிழா, திருமணம், முக்கியத் தருணங்களில் ரயிலில் பயணம் செல்ல அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதனால் பலர் ஏமாற்றம் அடைகின்றனர்.

இந்த நிலையில், ரயில் டிக்கெட் பதிவு செய்தால் சில நேரங்களில் பயணத்தின் இறுதி நேரம் வரை டிக்கெட் உறுதி செய்யப்படாமல் இருக்கும்.

இதற்கு மாற்று ஏற்பாடாக, முதல் வகுப்பு டிக்கெட் உறுதியாகவில்லை எனில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யலாம்.

இதற்காக, ஐஆர்சிடிசியும், ஏர் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. முதல்கட்டமாக ராஜ்தானி ரயிலில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts